காய்ச்சல் காரணமாக ஒரு வயதும் ஐந்து மாதமுமான ஆண் குழந்தை உயிரிழந்துள்ளது.
மீசாலை வடக்கு கொடிகாமத்தைச் சேர்ந்த வாகீசன் விதுசன் என்ற ஆண் குழந்தையே உயிரிழந்துள்ளது.
கடந்த 5 நாட்களாக காய்ச்சல் காரணமாக ஆயுள்வேத வைத்தியம் செய்த நிலையில், நேற்று பிற்பகல் ஐந்து மணிக்கு சாவச்சேரி வைத்தியசாலை கொண்டுசெல்லப்பட்டுள்ளது.
அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்கு யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி நேற்று இரவு மரணமடைந்துள்ளது.
குழந்தை டெங்கு காச்சலால் மரணமடைந்த்துள்ளது என அறிக்கையிடப்பட்டுள்ளது.
மரண விசாரணையை நமச்சிவாயம் பிறேமகுமார் மேற்கொண்டார்.
#SriLankaNews

