பெண்களுக்கு எதிரான வன்முறையை கண்டித்து பாராளுமன்றில் ஆர்ப்பாட்டம்!

பெண்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுப்பதற்கு கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என பாராளுமன்றில் ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த ஆர்ப்பாட்டத்தை பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி முன்னெடுத்துள்ளது.

“பெண்களுக்கு எதிரான வன்முறையை நிறுத்து” என்ற ‘ஸ்டிக்கரை’ சட்டைகளில் ஒட்டியபடி, கையில் பட்டிகளை அணிந்துகொண்டு ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் சபை அமர்வில் பங்கேற்றனர்.

258815277 3160308760917180 5717484958572561446 n

பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிரான வன்முறைகளுக்கும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

பெண்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுக்க கோரும் சர்வதேச தினம் இன்றாகும். அந்நாளிலேயே இதனை இலங்கையின் எதிர்க்கட்சி வலியுறுத்தியுள்ளது.

#SriLankaNews

Exit mobile version