சென்னை சூப்பர் கிங்ஸ்- டெல்லி கப்பிடல்ஸ் அணிகளுகிடையில் நடைபெற்ற போட்டியில் டெல்லி கப்பிடல்ஸ் அணி வெற்றி பெற்றது.
இன்று இடம்பெற்ற IPL2021ன் 50-வது லீக் ஆட்டம் துபாயில் நடைபெற்றது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ்- டெல்லி கப்பிடல்ஸ் அணிகள் மோதின . டாஸ் வெற்றி பெற்ற டெல்லி அணி கேப்டன் ரிஷாப் பண்ட் பந்துவீச்சு தேர்வு செய்தார்.
அதை தொடர்ந்து முதலில் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 136 ரன்கள் சேர்த்துள்ளது. டு பிளிஸ்சிஸ் 10 ரன்னிலும், ருதுராஜ் கெய்க்வாட் 13 ரன்னிலும், ராபின் உத்தப்பா 19 ரன்களும், மொயீன் அலி 5 ரன்களும் எடுத்தனர். எம்.எஸ். டோனி 18 ரன்னில் ஆட்டமிழந்தார். பொறுப்புடன் ஆடிய அம்பதி ராயுடு அரை சதமடித்தார்.அவர் 55 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.
137 என்ற வெற்றி இலக்குடன்களமிறங்கிய டெல்லி கப்பிடல்ஸ் அணியின் ஷிகர் தவான் தவிர மற்ற வீரர்கள் அடுத்தடுத்து இலக்குகளை பறிகொடுத்தனர் .தவான் 39 ரன்னில் ஆட்டமிழந்தார்.அதன்பின் களமிறங்கிய ஹெட்மயர் நிதானமாக துடுப்பாடி 28 ரன்கள் எடுத்து தனதனியை வெற்றி பெற செய்தர்.
Leave a comment