மறைந்த ஊடக மாணவிக்கு ஏகாந்த நிலையில் பட்டம்!

UOJ 2778 Copy

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 35 ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா நேற்றைய தினம் ஆரம்பமானது.

இந்த பட்டமளிப்பு விழாவில் மாணவி ஒருவருக்கு ஏகாந்த நிலையில் பட்டமும், நினைவுத் தங்கப் பதக்கமும் வழங்கப்பட்டுள்ளது.

யாழ். பல்கலைக்கழக கலைப்பீடத்தின் ஊடகத் துறையில் சிறப்புக் கலைமாணி பட்டம் பெற்ற செல்வி தில்காந்தி நவரட்ணம் பட்டமளிப்பு விழாவின் போது உயிருடன் இல்லாத நிலையில் அவருக்கான சிறப்புப் பட்டம் அவரது தயாரிடம் வழங்கப்பட்டது.

யாழ். பல்கலைக்கழக ஊடகத்துறையில் சிறப்புத் தேர்சிக்காக வழங்கம்படும் மறைந்த மாணவன் சகாதேவன் நிலக்‌ஷன் ஞாபகார்த்த தங்கப்பதக்கமும் குறித்த மாணவிக்கே வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

#SriLankaNews

Exit mobile version