அஞ்சல் திணைக்களத்தின் அனைத்து தொழிற்சங்கங்களும், நேற்று (13) திங்கட்கிழமை மாலை 4 மணி முதல் இன்று நள்ளிரவு வரை அடையாள பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளன.
அஞ்சல் மற்றும் தொலைத்தொடர்பு உத்தியோகத்தர்கள் சங்கத்தின் தலைவர், சாந்த குமார மீகம இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இதனால், யாழ்ப்பாண மாவட்டத்தில் தபால்சேவைகள் முற்றாகப் பாதிக்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாண பிரதம தபால் நிலையம் உட்பட மாவட்டத்தின் அனைத்து பிரதேச செயலகப் பிரிவுகளிலுமுள்ள தபால் அலுவலகங்கள் மற்றும் உப தபால் அலுவலகங்கள் செயலிழந்து காணப்பட்டன.
தபால் விநியோகம் உட்பட அனைத்து நடவடிக்கைககளும் ஸ்தம்பித்திருந்தன. தபால் சேவைகளைப்பெற தபால் நிலையங்களுக்கு வந்தோர் திரும்பிச் சென்றதை அவதானிக்க முடிந்தது.
#SrilankaNews