பிரதமர் தலைமையில் அலரி மாளிகையில் தீபாவளி நிகழ்வு

கொவிட் சுகாதார நடைமுறைகளுடன் பிரதமர் தலைமையில், அலரி மாளிகையில், இந்து சமய அறநெறிப் பாடசாலை மாணவர்களோடு தீபாவளிப் பண்டிகை நிகழ்வு சிறப்புற நடைபெற்றுள்ளது.

நிகழ்வை, பிரதமரின் பாரியார்,சிராந்தி ராஜபக்ச மங்கல விளக்கேற்றி ஆரம்பித்து வைத்தார்.

தொடர்ந்து, பிரதமர் மற்றும் அவரது பாரியார் ஆகியோரால் இந்து சமய அறநெறி பாடசாலை சிறார்களுக்கு இனிப்பு பண்டங்கள் வழங்கப்பட்டதுடன், இந்து சமய அறநெறிக் கல்விப் பாடநூல்கள் மற்றும் செயல் நூல்கள் ஆகியவையும் வழங்கப்பட்டன.

தீபாவளிப் பண்டிகை நிகழ்வு PMO Tamil news 01

#SriLankaNews

Exit mobile version