கொவிட் தொற்று நோய்க்கு முன்னர் இலங்கை வரும் சர்வதேச விமானங்களின் எண்ணிக்கை நாடு திறக்கப்பட்டதன் பின்னர் குறைவடைந்துள்ளது.
கொவிட் தொற்றுநோய்க்கு முன்னர் 37 சர்வதேச விமான நிறுவனங்கள் இலங்கைக்கு நேரடி விமானங்களை இயக்கியது.
எனினும் நாடு மீண்டும் திறக்கப்பட்டதில் இருந்து, 23 சர்வதேச விமான நிறுவனங்கள் மாத்திரமே இலங்கைக்கான விமானங்களைத் தொடங்கியுள்ளன.
மேலும் 08 விமான நிறுவனங்கள் சரக்கு போக்குவரத்தை மீண்டும் ஆரம்பித்துள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
இதேவேளை போலந்துக்கும் இலங்கைக்கும் இடையில் நேரடி விமான சேவையை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, போலந்தின் வார்சாவில் உள்ள சோபின் சர்வதேச விமான நிலையத்திலிருந்து நேற்று காலை முதல் விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது.
#SrilankaNews