‘சமத்துவமின்மையை ஒழித்து எய்ட்ஸ் நோயை இல்லாதொழிப்போம் – தொற்றுநோய்களை வெல்வோம்’ என்ற தொனி பொருளின் கீழ் இவ்வாண்டு உலக எயிட்ஸ் தினம் கொண்டாடப்படுகின்றது.
இலங்கையில் எச்.ஐ.வி தொற்றாளர்கள் 363 பேர் கடந்த ஆண்டு இனங்காணப்பட்டிருந்தனர். 2019 ஆம் ஆண்டு இனங்காணப்பட்ட தொற்றாளர்களின் எண்ணிக்கையை விட குறைவான எண்ணிக்கையே பதிவாகி உள்ளது.
1981 ஆம் ஆண்டு உலகில் முதலாவது எச்.ஐ.வி தொற்றாளர் இனங்காணப்பட்டிருந்தார். இலங்கையில் எயிட்ஸ் தொற்றாளர் 1988 ஆம் ஆண்டு கண்டறியப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து ஐக்கிய நாடுகளால் 1988 ஆம் ஆண்டு தொடக்கம் டிசம்பர் முதலாம் திகதி உலக எய்ட்ஸ் தினமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது.
தேசிய பாலியல்சார் நோய்கள் மற்றும் எயிட்ஸ் கட்டுப்பாட்டுத் திட்டத்தின் பணிப்பாளர் வைத்தியர் ரசாஞ்சலி ஹெட்டியாராச்சி எயிட்ஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை கொவிட் தொற்று காரணமாக வீழ்ச்சி கண்டுள்ளதாக தெரிவித்தார்.
எச்.ஐ.வி பரவல் குறைந்த நாடுகளின் பட்டியலில் இலங்கை இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
#SriLankaNews
Leave a comment