25 68e368cf08698
செய்திகள்இலங்கை

இலங்கையில் திருமணங்கள் குறைவு: 2024 இல் 12,066 திருமணப் பதிவுகள் சரிவு!

Share

கடந்த ஆண்டில் (2024) நாட்டில் திருமணங்களின் எண்ணிக்கை பன்னிரண்டாயிரத்து அறுபத்தாறு (12,066) குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் கூறப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு நாட்டில் நடந்த மொத்த திருமணங்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து முப்பத்தாயிரத்து இருநூற்று தொண்ணூறு (139,290) ஆக பதிவாகியுள்ளது.

2023 ஆம் ஆண்டில், ஒரு லட்சத்து ஐம்பத்து இரண்டாயிரத்து முந்நூற்று ஐம்பத்தாறு (151,356) திருமணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இருப்பினும், நாடு கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்ட 2022 ஆம் ஆண்டில், நாட்டில் ஒரு லட்சத்து எழுபத்தொராயிரத்து நூற்று நாற்பது (171,140) திருமணங்கள் நடந்ததாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2021 ஆம் ஆண்டில், ஒரு லட்சத்து அறுபத்து இரண்டாயிரத்து அறுநூற்று இருபத்தெட்டு (162,628) திருமணப் பதிவுகள் இடம்பெற்றுள்ளன, மேலும் 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில் திருமணங்களில் படிப்படியாகக் குறைவு ஏற்பட்டுள்ளதாக அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

இதேவேளை, இந்த திருமணங்களில் பெரும்பாலானவை பொதுச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில், பொருளாதாரப் பிரச்சினைகள், அதிகரித்த குடும்பப் பொறுப்புகள், உயர்கல்வி, வேலையின்மை, இளைஞர்கள் திருமணம் செய்து கொள்ளத் தயங்குவது, குடும்பத் தேவைகளைப் பூர்த்தி செய்ய வேலையில் இருந்து போதுமான சம்பளம் இல்லாதது மற்றும் சமூகப் பிரச்சினைகள் ஆகியவை திருமணத்தைத் தாமதப்படுத்துவதற்கான காரணங்களாக சமூகவியலாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

Share

Recent Posts

தொடர்புடையது
202104130023062602 Bribery SECVPF
செய்திகள்இலங்கை

அரச பதவிகளுக்கு கையூட்டு கோரிய முன்னாள் பிரதியமைச்சர் பணியாளர் உட்பட இருவர் கைது!

அரச பதவிகளுக்கு கையூட்டல் கேட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பாக இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கையூட்டல் ஒழிப்பு...

25 68fb438418a4b
செய்திகள்இலங்கை

“என் உயிருக்கு ஆபத்து”: தனக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாக எதிர்க்கட்சி உறுப்பினர் நாடாளுமன்றத்தில் பரபரப்பு குற்றச்சாட்டு!

எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் விதான தனக்குக் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாகவும் தனது உயிருக்கு ஆபத்து...

25 68fb58c78e11e
செய்திகள்இலங்கை

மோசமான பராமரிப்பு: இலங்கைக்கு நன்கொடையாக வழங்கிய மேலும் இரண்டு யானைகளைத் தாய்லாந்து திரும்பப் பெறுகிறது!

இலங்கை அரசாங்கத்திற்குக் நன்கொடையாக வழங்கப்பட்ட மேலும் இரண்டு யானைகளைத் தாய்லாந்து அரசு திருப்பிப் பெறத் திட்டமிட்டுள்ளது....