உயிர் பறித்த செல்பி!

selpi

உலகில் செல்பி மோகத்தால் உயிரை இழக்கும் சம்பவங்கள் அதிகம் நடந்தவண்ணம் உள்ளன.

அந்தவகையில் இந்தியா – இமாச்சல பிரதேசத்தில் பஹாங் என்ற இடத்தில் செல்பி எடுத்தபோது நீரில் மூழ்கி நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.

இச் சம்பவம் நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்தவர்களில் இருவர் ஒரே குடும்பத்தைச் சார்ந்த தாய் மற்றும் மகன் ஆவார்.

மேலும் உயிரிழந்தவர்களில் இரு சுற்றுலாப்பயணிகளும் உள்ளடங்குவார்.

Exit mobile version