இலங்கையர்களுக்கு மாலை 6 மணி வரை காலக்கெடு! – அதிர்ச்சியில் மக்கள்

zePBjZACouwfRR7I6vibtlity9Bo4v4J

இன்று மாலை 6 மணிக்கு பின்னர் நாடு இருளில் மூழ்கும் அபாயம் உள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன.

நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் பற்றாக்குறை காரணமாக இரண்டு மின் ஆலைகள் மூடப்பட்டுள்ளன. இந்த நிலையில் இன்று மாலை 6 மணியுடன் நாடு இருளில் மூழ்கும் என தெரிவிக்கப்படுகிறது.

ஏற்கனவே மின்னுற்பத்தி நிலையங்களுக்கு தேவையான எரிபொருள், இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திடம் பெற்றுக்கொள்ளப்பட்ட நிலையில், குறித்த எரிபொருள் இன்று மாலை 6 மணி வரை மட்டுமே போதுமானதாக உள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.

சற்று முன்னர் களனிதிஸ்ஸ அனல்மின் நிலையத்தில் 63 மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் இயந்திரம் ஒன்று செயலிழந்துள்ளது என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது. இந்த நிலையில், களனிதிஸ்ஸ மின் உற்பத்தி நிலையம் மூடப்பட்டுள்ளது.

இதேவேளை, மின் உற்பத்திக்கு தேவையான எரிபொருளை பெறுவதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

#SriLankaNews

Exit mobile version