பாடசாலைகள் திறப்பு – திகதி அறிவிக்கப்பட்டது!

Untitled 1

இம்மாதம் 21ஆம் திகதி பாடசாலைகளை மீளத் திறக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நாடளாவிய ரீதியில் கொரோனா தொற்றுப் பரவல் அதிகரித்துள்ள நிலையில், இம்மாதம் 21ஆம் திகதி பாடசாலைகளை மீளத் திறக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய 200க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகளின் ஆரம்பப்பிரிவு வகுப்புகளை எதிர்வரும் ஒக்டோபர் 21 மீள ஆரம்பிப்பதற்கு அனைத்து மாகாண ஆளுநர்களும் தீர்மானித்துள்ளனர்.

கல்வியமைச்சின் அதிகாரிகளுடன், அனைத்து மாகாண ஆளுநர்களும்; இன்று முன்னெடுத்த கலந்துரையாடலிலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஏனைய பிரிவுக்கான வகுப்புக்களின் ஆரம்பத் திகதி தொடர்பில் விரைவில் அறிவிக்கப்படும் எனவும், நான்கு நிலைகளில் பாடசாலைகளை மீண்டும் திறப்பதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய முதல் கட்டத்தின் கீழ் தரம் 1 முதல் 5 வரை 3884 பாடசாலைகள் மீண்டும் திறக்கப்படவுள்ளது.

Exit mobile version