தரவுத்தளம் அழிப்பு – விசாரணை ஆரம்பம்!
தேசிய ஒளடத கட்டுப்பாட்டு அதிகார சபையின் தானியங்கி தரவுத்தளம் அழிக்கப்பட்டமை தொடர்பில் உரிய விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்ணான்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.
நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
குறித்த தரவுத்தளம், இணைய ஊடுருவிகளால் அழிக்கப்பட்டிருக்கக் கூடும் என அவர் தெரிவித்துள்ளார். இது போன்ற சம்பவங்கள் எதிர்காலத்திலும் ஏற்படக்கூடும்.
எனவே இது தொடர்பான உரிய விசாரணைகளை சுகாதார அமைச்சு தொடர்ந்தும் முன்னெடுக்கும் என இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்ணான்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.