சிவப்பு எச்சரிக்கை நீக்கப்பட்டாலும் ஆபத்து குறையவில்லை: மண்சரிவு பகுதிகளில் வசிப்போருக்கு NBRO கடும் எச்சரிக்கை!

25 693eb9bc28958

மண்சரிவு அபாயத்தைக் குறிக்கும் ‘சிவப்பு எச்சரிக்கைகள்’ (Red Alerts) சில பகுதிகளில் நீக்கப்பட்ட போதிலும், அந்த இடங்களில் இன்னும் ஆபத்து முழுமையாக நீங்கவில்லை என தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) எச்சரித்துள்ளது.

மழை குறைந்தாலும், தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவன அதிகாரிகள் நேரில் வந்து குறித்த பகுதிகளை ஆய்வு செய்து பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வரை, இடம்பெயர்ந்துள்ள பொதுமக்கள் தமது வீடுகளுக்குத் திரும்ப வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

அதிகாரிகளால் வழங்கப்படும் ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டல்களைப் பின்பற்றுவது உயிராபத்துக்களைத் தவிர்க்க அவசியமானது என நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.

தற்போது 5 மாவட்டங்களில் உள்ள 17 பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு முதலாம் கட்ட (மஞ்சள்) எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மக்கள் அவதானமாக இருக்க வேண்டிய பகுதிகள்:

கண்டி மாவட்டம்: உடுதும்பர, மினுபே, மெததும்பர, தொழுவ.
நுவரெலியா மாவட்டம்: வலப்பனை, ஹகுரான்கெத்த, நில்தண்டாஹின்ன, மதுரட்ட.
பதுளை மாவட்டம்: சொரணதோட்டை, லுணுகல, மீகஹகிவுல.
குருநாகல் மாவட்டம்: ரிதிகம.
மாத்தளை மாவட்டம்: ரத்தோட்டை, அம்பன்கங் கோரளை, உகுவெல, யாதவத்த, பல்லேபொல.

மண்சரிவு அபாயம் உள்ள பகுதிகளில் விரிசல்கள், நிலம் உள்வாங்குதல் அல்லது நீரூற்றுகள் திடீரெனத் தோன்றுவது போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாகப் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

 

 

Exit mobile version