ஜனாதிபதி அழைப்பை புறக்கணித்த இ.தொ.கா!

1592375857 Jeevan Thondaman CWC General Secretary L

நாட்டு ஜனாதிபதி அவர்களின் 2 வருட பதவிக்கால பூர்த்தியை முன்னிட்டு நேற்றும் இன்றும் நடைபெறும் நிகழ்வுகளில் பங்கேற்காமல்,  இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ்புறக்கணித்துள்ளது.

கடந்த 2019 ஆம் ஆண்டு நாட்டின் தலைவராக கோட்டாபாய ராஜபக்ச தெரிவுச்செய்யப்பட்டு இரண்டு ஆண்டுகள் ஆகின்ற நிலையில் ஜனாதிபதியின் 2 வருட பதவிக்கால பூர்த்தியை முன்னிட்டு அநுராதபுரத்தில் நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இந்நிகழ்வுகளுக்கு இலங்கையில் உள்ள பிரமுகர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பிரமுகர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. எனினும், நேற்றைய நிகழ்வுகளில் இ.தொ.கா. பங்கேற்கவில்லை.

தற்போது மக்கள் பாரிய பொருளாதார நெருக்கடியில் இருக்கும் இச்சந்தர்ப்பத்தில் இவ்வாறான ஒரு நிகழ்வு தேவையா என்பது உட்பட மேலும் சில காரணங்களாலேயே இ.தொ.கா. பங்கேற்கவில்ல என தெரியவருகின்றது.

#SriLankaNews

Exit mobile version