தெஹிவளை கடற்பகுதியில் நடமாடிய முதலை தற்போது ‘போர்ட்சிற்றி’ பகுதிக்கு வந்துள்ளது என சந்தேகிக்கப்படுகின்றது.
தெஹிவளை கடற்பகுதியில் அண்மையில் முதலை தாக்குதலுக்கு இலக்காகி நபரொருவர் பலியானார்.
இந்நிலையில் அந்த முதலையை பிடிப்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டன. எனினும் அது கைக்கூடவில்லை.
கொழும்பு, போர்ட்சிற்றி பகுதியில் நேற்று முதலையொன்று தென்பட்டுள்ளது. தெஹிவளை பகுதியில் இருந்த முதலையே அங்கு வந்துள்ளது என அப்பகுதியில் உள்ளவர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
#SriLankaNews