நாடாளுமன்றில் தகாத வார்த்தையைப் பயன்படுத்தி காரசாரமான விவாதம்!

mahindanantha aluthkamake

நாடாளுமன்றத்தில் எதிர்கட்சியினருடன் காரசாரமான விவாதம் இன்று (09) இடம்பெற்றது.

இதன்போது லொஹான் ரத்வத்த எதிரணியினரை நோக்கிக் கூச்சலிட்டதுடன், தகாத வார்த்தையைப் பயன்படுத்தியிருந்தார்.

இதன்போது அருகில் இருந்த அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே, ரத்வத்தவின் தலையில் கைகளை வைத்து அவரை அமைதிப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டமை குறிப்பிடத்தகது.

இந்தநிலையில், கோபத்தில் கடுமையான சொற்பிரயோகங்களை மீண்டும் மீண்டும் பயன்படுத்திய லொஹான் ரதவத்தவைக் கட்டுப்படுத்த மஹிந்தானந்த அளுத்கமகே முயன்றிருந்தார்.

லொஹான் ரத்வத்த சிறைச்சாலையில் கைதிகளை மண்டியிடவைத்து துப்பாக்கி முனையில் அச்சுறுத்திய விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

#SrilankaNews

Exit mobile version