கொவிட் தொற்று! – மூன்று பிள்ளைகளின் தாய் உயிரிழப்பு

01 Jaffna

கொவிட் தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்றுவந்த 3 பிள்ளைகளின் தாயார் உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம் – அராலி வீதி – வசந்தபுரத்தைச் சேர்ந்த கண்ணன் பத்மலோஜினி (வயது-38) என்பவரே உயிரிழந்துள்ளார்.

குறித்த பெண் 6 நாள்களாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில்,மருத்துவ ஆலோசனையுடன் தனியார் கிளினிக்கில் மாத்திரைகளைப் பெற்றுள்ளார்.

இந்த நிலையில், நேற்றுமுன்தினம் மூச்சுத் திணறல் ஏற்பட்ட நிலையில் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் நேற்றுமுன்தினம் முற்பகல் 10.30 மணிக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டுவந்த நிலையில், சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார்.

அவரது சடலத்தில் பெறப்பட்ட மாதிரிகள் பி.சி.ஆர். பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்ட நிலையில், அவருக்கு
கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

உயிரிழந்த பெண் கொவிட் தடுப்பூசியின் முழுமையான அளவைப் பெற்றுக்கொள்ளவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை திடீர் இறப்பு விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்தார்.

உடற்கூற்று பரிசோதனைக்காக சடலம் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் சுகாதார விதிமுறைகளின் அடிப்படையில் தகனம் செய்யப்படவுள்ளது.

#SriLankaNews

Exit mobile version