நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி மேலும் 24 பேர் உயிரிழந்துள்ளதாக சற்றுமுன்னர் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தினார்.
இவர்கள் அனைவரும் நேற்றைய தினம் உயிரிழந்தவர்கள் என அவர் குறிப்பிட்டார்.
நாடு பாரிய சிக்கலை சந்தித்து மீண்டுக்கொண்டிருக்கும் வேளையில் மீண்டும் கொரோனா தாண்டவமாடக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது.
மக்கள் அலட்சியபோக்கை தவிர்த்து, சுகாதார வழிமுறைகளை அவதானமாக பின்பற்றுமாறும் தெரிவித்துள்ளார்.
நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 14,182 ஆக அதிகரித்துள்ளதுள்ளதுடன்,இதுவரை அடையாளம் காணப்பட்ட மொத்த தொற்று நபர்களின் எண்ணிக்கை 557,172 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
#SriLankaNews