யாழ். மாநகர சபை ஆணையாளருக்கு கொவிட் தொற்று

நலம் விசாரிக்கச் சென்ற 25 பேருக்கு தொற்று! - தென்மராட்சியில் சம்பவம்

நலம் விசாரிக்கச் சென்ற 25 பேருக்கு தொற்று! - தென்மராட்சியில் சம்பவம்

யாழ்ப்பாணம் மாநகர சபை ஆணையாளர் ரி.ஜெயசீலனுக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து அவர் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளார் என சுகாதாரத் துறையினர் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணம் மாநகர சபை ஆணையாளர் ரி.ஜெயசீலனுக்கு கொவிட் தொற்று அறிகுறிகள் காணப்பட்ட நிலையில், அவருக்கு முன்னெடுக்கப்பட்ட பரிசோதனையில் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

இதேவேளை, அவருடன் பணியாற்றும் 15 உத்தியோகத்தர்களிடம் அன்டிஜென் பரிசோதனை முன்னெடுக்கப்பட்ட நிலையில், அவர்களுக்கு பி.சி.ஆர். பரிசோதனை முன்னெடுக்கப்படவுள்ளது என சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version