உலக நாடுகளை அச்சுறுத்தி வருகின்ற கொரோனா வைரஸ் காரணமாக இதுவரை 23.18 கோடிப் பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.
இந்நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 47.50 லட்சத்தைக் கடந்துள்ளது.
எனினும் கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 20.84 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர்.
மேலும் தொற்றுக்குள்ளானோரில் 1.86 கோடிக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சிகிச்சை பெறுபவர்களில் 95 ஆயிரத்துக்கு மேற்பட்டோரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், பிரிட்டன், ரஷ்யா ஆகியவை முதல் 5 இடங்களில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.