பாடசாலை மாணவி ஒருவரை நபர் ஒருவர் துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்த சம்பவம் ஒன்று பண்டாரவளை, எல்ல கரந்தகொல்ல பிரதேசத்தில் பதிவாகி உள்ளது.
குறித்த சம்பவம் நேற்று (25) மதியம் இடம்பெற்றுள்ளதாக தெரிய வருகிறது.
17 வயதுடைய பாடசாலை மாணவி பாடசாலை விட்டு வீடு திரும்பும் வேளையிலே ஸ்கூட்டரில் வந்த ஒருவர், வீதியில் மாணவியை மறித்து, மாணவியைத் தாக்கி, அருகில் உள்ள பாழடைந்த தோட்டத்திற்கு இழுத்துச் சென்றுள்ளார்.
சந்தேகநபர் மாணவியை துஷ்பிரயோகம் செய்ய முயன்ற போது, மாணவி சந்தேகநபரின் முகத்தை கடித்து, கல்லால் முகத்தில் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பியுள்ளார்.
சம்பவம் தொடர்பில் எல்ல பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்ட பின்னர் சந்தேகநபர் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
#SriLankaNews