நாடு இருண்ட யுகமாகும்: கூறும் தேரர்

Medagama Dhammananda Thero

குறுகிய நோக்கத்தை உடையவர்கள் மதங்களுக்கிடையில் முரண்பாட்டைத் தோற்றுவிக்க முயற்சிக்கிறார்கள் என்று அஸ்கிரிய பீடத்தின் அநுநாயக ஸ்ரீ மெதகம தம்மானந்த தேரர் தெரிவித்துள்ளார்.

நாட்டில் தேசிய நல்லிணக்கம் கட்டியெழுப்பப்படாவிடின் நாடு இருண்ட யுகமாகும் எனவும் அரசியல்வாதிகள் அதனை சாதகமாக பயன்படுத்துகிறார்கள் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

நாட்டின் உள்ளக விவகாரங்களில் சர்வதேசத்தின் தலையீடு எல்லைகடந்து சென்றுள்ளது. மதங்களுக்கிடையில் திட்டமிட்ட வகையில் முரண்பாடுகளை தோற்றுவிக்க ஒரு தரப்பினர் முயன்று வருகின்றனர்.

மேலும் இன நல்லிணக்கத்தை அரசியல்வாதிகள் விரும்புவதில்லை. தேசிய நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்பும் பொறுப்பு மதத் தலைவர்களுக்கு உண்டு என்றும் அஸ்கிரிய பீடத்தின் அநுநாயக ஸ்ரீ மெதகம தம்மானந்த தேரர் தெரிவித்துள்ளார்.

#SrilankaNews

Exit mobile version