இந்தியாவின் விருத்தாச்சல நகராட்சி கொரோனா பெருந்தொற்றை கட்டுப்படுத்தும் நோக்குடன் நான்கு வீதிகளுக்கு சீல் வைத்துள்ளது.
விருத்தாசலம் நகராட்சிக்கு உட்பட்ட ஜங்ஷன் ரோடு, வி.என்.ஆர். நகர் செல்லும் வழி, ஆலடி ரோடு, தெற்கு பெரியார் நகர், டிரைவர் குடியிருப்பு உள்ளிட்ட பகுதிகளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் அதிக அளவில் உள்ளனர்.
இதனால் நகராட்சி ஆணையாளர் ஜெயப்பிரகாஷ் நாராயணன் உத்தரவின்பேரில் அந்த பகுதிகளுக்கு செல்லும் பாதை அனைத்தும் தகரத்தால் அடைக்கப்பட்டு வெளிநபர்கள் யாரும் அந்த பகுதிகளுக்குள் செல்லமுடியாதபடி வீதிகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
மேலும் தொற்று பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் பாலசந்தர், சுகாதார ஆய்வாளர் ராஜா மற்றும் மருத்துவ குழுவினர் முகாமிட்டு சுகாதார பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.
விருத்தாசலத்தில் உள்ள 33 வார்டுகளிலும் 94 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.தொற்று கண்டறியப்பட்டவர்கள் வசிக்கும் பகுதியில் வீதிகளை மீண்டும் தகரங்களை கொண்டு அடைத்து வருகின்றனர்.
#Worldnews