கொரோனாத் தொற்று – 3,644 சாவு – 204
நாட்டில் இன்று மேலும் 3 ஆயிரத்து 644 பேர் கொரோனாத் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர்.
அதன்படி நாட்டில் கொரோனாத் தொற்றாளர்களின் எண்ணிக்கை 4 லட்சத்து 51 ஆயிரத்து 401 ஆக அதிகரித்துள்ளது என அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதேவேளை கொரோனாத் தொற்றில் இருந்து இதுவரை 3 லட்சத்து 40 ஆயிரத்து 166 பேர் பூரணமாக குணமடைந்துள்ளனர்.
மேலும் நேற்றைய தினம் மாத்திரம் நாட்டில் மேலும் 202 பேர் உயிரிழந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
அதன்படி நாட்டில் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 9 ஆயிரத்து 806 ஆக அதிகரித்துள்ளது என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.