கொரோனா தடுப்பிற்காக மாத்திரை வடிவில் உட்கொள்ளக்கூடிய மருந்து தயாரிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இந்த மாத்திரை வடிவிலான தடுப்பு மருந்தை உருவாக்கும் ஆய்வில் பைசர் நிறுவனம் ஈடுபட்டுள்ளது.
இந்த மருந்து ஆய்வுச் சோதனையில் PF-07321332 என்று அழைக்கப்படுகின்றது.
உடல்நலக் குறைகள் இல்லாத 18 வயதுக்கு மேற்பட்ட 2,660 பேருக்கு இந்த மருந்து அளிக்கப்படவிருக்கிறது.
வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டு, அறிகுறிகளுடன் இருக்கும் நபர்களுக்கே பரிசோதனை முயற்சி மேற்கொள்ளப்படவுள்ளது.
“இத் திட்டம் வெற்றி பெற்றால், இந்த சிகிச்சை வேகமாக முன்னெடுக்கப்பட்டு வைரஸை முன்கூட்டியே தடுப்பதற்கு முடியுமாக இருக்கும்” என்று பைசர் மருந்து உற்பத்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.