கொரோனாவால் 22 வயது பெண் சாவு! – பருத்தித்துறையில் சம்பவம்

death

பருத்தித்துறை, மந்திகை ஆதார மருத்துவமனையின் வெளிநோயாளர் பிரிவில் சேர்க்கப்பட்டு, உயிரிழந்த 22 வயது இளம் பெண் உட்பட இருவருக்குக் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

பருத்தித்துறை புலோலியைச் சேர்ந்த 22 வயது இளம் பெண் ஒருவர் மூன்று நாள்களாகக் காய்ச்சலுக்கு உள்ளாகியிருந்தார்.

சுவாசிப்பதற்குச் சிரமப்பட்ட நிலையில், இன்று காலை  மந்திகை மருத்துவமனையின் வெளிநோயாளர் பிரிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளார். ஆயினும் மருத்துவர் பரிசோதிக்கும்போது அவர் ஏற்கனவே உயிரிழந்திருந்தார்.

பெண்ணின் உடலில் இருந்து எடுக்கப்பட்ட மாதிரிகள் துரித அன்ரிஜென் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டபோது, அவருக்குக் கொரோனாத் தொற்றுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதேவேளை, வல்வெட்டித்துறையைச் சேர்ந்த 69 வயதுப் பெண்ணொருவர் மந்திகை மருத்துவமனைக்கு நோயாளர் காவு வண்டி மூலம் கொண்டுவரப்பட்டார்.

அவர் மருத்துவமனையின் வெளிநோயாளர் பிரிவுக்குக் கொண்டுவரப்பட்டபோது உயிரிழந்தார். அவரது உடலில் இருந்து பெறப்பட்ட மாதிரிகள் துரித அன்ரிஜென் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டபோது அவருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

 

 

 

Exit mobile version