ரஸ்யாவில் கொரோனாத் தொற்று அதிகரித்து வரும் நிலையில், அங்கு ஒரு நாளில் உயிரிழந்தோர் எண்ணிக்கை ஆயிரத்து 75 ஆக உயர்வடைந்துள்ளது.
உலகம் முழுவதும் கொரோனாத் தொற்றின் தாக்கம் அதிகரித்து வருகிறது.
தொற்றுக்குள்ளான நாடுகளின் வரிசையில், முறையே அமெரிக்கா, இந்தியா, பிரேசில் ஆகிய நாடுகள் முதல் நிலைகளில் பதிவாகியுள்ளன. இந்நிலையில் உலகளாவிய ரீதியில்
தொற்றுப் பாதிப்புக்குள்ளான நாடுகளின் தரத்தில் ரஸ்யா 5ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டுள்ளது. தற்போது ரஸ்யாவில் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை
அதிகரித்து வரும் நிலையில், கடந்த ஒரு நாளில் மாத்திரம் 1075 பேர் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்துள்ளனர். கடந்த ஒரு நாளில் மாத்திரம் 37,678 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுவரை ரஸ்யாவில் சாவடைந்தோர் எண்ணிக்கை 2 இட்சத்து 29 ஆயிரத்து 528 ஆக உயர்ந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
#world