அமெரிக்காவின் முன்னாள் அதிபரான பாரக் ஒபாமாவிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஒபாமா வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், கொரோனா பரிசோதனை செய்ததில் எனக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
நானும் எனது மனைவியுமான மிச்செல் இருவரும் கொரோனா தடுப்பூசி பூஸ்டர் எடுத்துக்கொண்டோம். அவருக்கு கொரோனா தொற்று இல்லை என தெரிய வந்தது.
தொற்றுகள் குறைந்தாலும்கூட நீங்கள் விரைவில் தடுப்பூசி செலுத்திக் கொள்ளுங்கள் என அவர் பதிவிட்டுள்ளார்.
#WorldNews
Leave a comment