யாழில் கொமர்ஷல் வங்கி ஊழியர்களுக்கு கொரோனாத் தொற்று!
செய்திகள்இலங்கை

யாழில் கொமர்ஷல் வங்கி ஊழியர்களுக்கு கொரோனாத் தொற்று!

Share

யாழ். போதனா வைத்தியசாலை வீதியில் அமைந்துள்ள கொமர்ஷல் வங்கியின் பிரதான கிளையில் பணியாற்றுகின்ற 12 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந் நிலையில் மாநகர சுகாதார மருத்துவ அதிகாரியின் அறிவுறுத்தலுக்கமைய வங்கி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதோடு, அக் கிளையில் பணியாற்றும் 40 உத்தியோகத்தர்கள், சுத்திகரிப்பு தொழிலாளிகள் ஆகியோர் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

குறித்த வங்கியில் பணியாற்றும் உத்தியோகத்தர்கள், சுத்திகரிப்புத் தொழிலாளிகள் என 34 பேரிடம் நேற்று மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனை முடிவுகளில் 12 பேருக்கு கொரோனாத் தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அங்கு நிரந்தரமாக கடமையாற்றுபவர்கள் தவிர்த்து வேறு கிளைகளில் பணியாற்றுகின்ற உத்தியோகத்தர்களைக் கடமைக்கு அமர்த்தி சுகாதார நடைமுறைகளை பேணி கிளை நடவடிக்கைகளை மீள ஆரம்பிக்கலாம் என்று பொதுச் சுகாதாரப் பரிசோதகர் பா.சஞ்சீவன் அறிவுறுத்தியுள்ளார்.

 

 

 

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
32 4
இலங்கைசெய்திகள்

எந்தவொரு அரசியல் கட்சியுடனும் கூட்டணி சேரப் போவதில்லை – சாகர

எந்தவொரு அரசியல் கட்சியுடனும் கூட்டணி சேரப் போவதில்லை என ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பொதுச் செயலாளர்...

31 4
இலங்கைசெய்திகள்

மிரட்டுகின்றார் அநுர! சுமந்திரன் பகிரங்க குற்றச்சாட்டு

தங்களிடம் மூன்றிலிரண்டு பெரும்பான்மைப் பலம் உள்ளது என்றும், தன்னிடம் நிறைவேற்று அதிகாரம் உள்ளது என்றும் ஜனாதிபதி...

30 5
இலங்கைசெய்திகள்

நீரில் மூழ்கிய நயினாதீவு படகுப் பாதை

நயினாதீவு – குறிகட்டுவான் இடையே சேவையில் ஈடுபட்ட நிலையில் நீண்ட காலமாக பழுதடைந்து சேவையில் ஈடுபட...

28 7
இலங்கைசெய்திகள்

இலங்கையும் இந்தியாவும் செய்து கொண்ட முக்கிய உடன்படிக்கை

இலங்கையின் வெளிநாட்டு கடன் மறுசீரமைப்பு செயல்முறையின் கீழ், கடன் வரி மற்றும் கொள்வனவாளர் கடன் ஒப்பந்தங்கள்...