கிளிநொச்சியில் 113 மாணவர்களுக்கு கொரோனா!

School Reopen

கிளிநொச்சியில் கடந்த 57 நாட்களில் 113 பாடசாலை மாணவர்களுக்கு  கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக மாவட்ட தொற்று நோயியலாளர் மருத்துவர் நிமால் அருமைநாதன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் இன்று (26) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

மேலும் தெரிவிக்கையில், மாணவர்கள் உள்ள்டங்கலாக 1,452 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.

கிளிநொச்சி மாவட்டத்தில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மூன்றாவது தடுப்பூசியாக பைசர் தடுப்பூசி ஏற்றும் பணிகள் நாளை (27) மேற்கொள்ளப்படவுள்ளது.

இவ் தடுப்பூசி ஏற்றும் பணிகள் கரைச்சி, கண்டாவளை, பூநகரி மற்றும் பளை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைகள் மற்றும் கிளிநொச்சி பொது வைத்தியசாலை ஆகிய இடங்களில்  மேற்கொள்ளப்படவுள்ளன எனவும் தெரிவித்துள்ளார்.

#SriLankaNews

Exit mobile version