கொரோனா அச்சமொழித்தார் ஸ்ராலின்- மக்கள் புகழாரம்!

Stalin 1

Stalin

இந்தியாவில் எவ்வித கொரோனா அச்சமுமின்றி வெளியே துணிச்சலாக நடமாட முடிவதாக, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்ராலினுக்கு மக்கள் பாராட்டுத் தெரிவித்துள்ளனர்.

தமிழக முதலமைச்சரான மு.க.ஸ்ராலின், தினமும் பொதுவெளியில் உடற்பயிற்சியில் ஈடுபடுவதை வழக்கமாகக் கொண்டுள்ள நிலையில், பொதுவெளியில் அவரைக் காணும் மக்கள், அவரது ஆட்சி குறித்துப் பாராட்டி வருகின்றனர்.

ஸ்ராலின் மிகவும் திறமையாக ஆட்சி செய்வதாகவும், கொரோனா விவகாரத்தில் அவர் மிகுந்த அவதானத்துடன் செயற்பட்டு, சிறப்பாக அதனைக் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பதாகவும், அவரை நேரில் சந்திக்கும் மக்கள் வாழ்த்தி வருகின்றனர்.

நேற்றையதினம் தமிழக முதலமைச்சர் நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது, அவரைச் சந்தித்த பொதுமகன் ஒருவர், பொதுமக்களுக்கு தடுப்பூசிகளைச் சரிவர முதல்வர் வழங்கியதாலேயே, அச்சமின்றி வெளியில் நடமாட முடிவதாகக் குறிப்பிட்டார்.

அவரைப் போன்றே நடைபயிற்சியில் ஈடுபட்ட பலரும் முதலமைச்சரை வாழ்த்திச் சென்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Exit mobile version