இந்திய மீனவர்களின் அத்துமீறல்! – இரண்டாவது நாளாகவும் தொடரும் போராட்டம்

இந்திய மீனவர்களின் அத்துமீறலை கண்டித்து யாழ்ப்பாணம் – வடமராட்சி, பருத்தித்துறை, சுப்பர்மடம் பகுதியில் தொடர்ந்து இரண்டாவது நாளாகவும் போராட்டம் இடம்பெற்று வருகின்றது.

வீதியில் கூடாரங்களை அமைத்து படகுகள் மற்றும் வலைகளை வைத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால் குறித்த வீதி ஊடான போக்குவரத்துக்கள் முற்றாக ஸ்தம்பிதம் அடைந்துள்ளது.

போராட்டம் இடம்பெறும் இடத்தில் அதிகமான பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

VideoCapture 20220201 114515
#SriLankaNews
Exit mobile version