தொடரும் ஊடக அடக்குமுறை – ஊடகவியலாளர் சமுதித்த வீடு மீது தாக்குதல்!!

jh

ஊடகவியலாளர் சமுதித்தவின் இல்லம் மீது ஆயுதம் தாங்கிய குழு நேற்றிரவு தாக்குதல் நடத்தியுள்ளது.

இது தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க தனது வன்மையான கண்டனங்களை பதிவிட்டுள்ளார்.

இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர்,

அரசு ஊடக அடக்குமுறையை மீண்டும் ஆரம்பித்துவிட்டதா? என்ற கேள்வியெழுகிறது.

ஊடகவியலாளர் சமுதித்தவை இலக்குவைத்து, அவரின் வீடுமீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவத்தை வன்மையாகக் ஐக்கிய மக்கள் சக்தி கண்டிக்கின்றது.

கருத்து சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டும் என குறிப்பிட்ட அவர், ஊடக அடக்குமுறையை அரசு கைவிட வேண்டும்.

அதேவேளை, ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்கமீது மேற்கொள்ளப்பட்ட முட்டை தாக்குதல் தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகள் மறைக்கப்பட்டுள்ளன எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

#SrilankaNews

 

 

Exit mobile version