துறைமுகத்தில் தேங்கிக் கிடக்கும் கொள்கலன்களை விடுவிக்க வங்கிகள் விரைவாக டொலர்களை செலுத்த வேண்டும் என அத்தியாவசியப் பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
தேங்கிக் கிடக்கும் பொருட்கள் தற்போது அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய நாட்டில் தற்போது 30% அத்தியாவசிய உணவுக் கொள்கலன்களை இறக்குமதி செய்துள்ளனர்.
வங்கிகள் டொலர்களை பல கட்டங்களாக வழங்வதே கொள்கலன்கள் இறக்குமதிக்கு தாமதம் என தொழிற்சங்கம் குறிப்பிட்டுள்ளது.
ஜனவரி மாத்தில் துறைமுகத்தல் இருந்து கொள்கலன்களை விரைவில் எடுப்பதற்கு வங்கிகள் டொலர்களை வழங்க வேண்டும் என அத்தியாவசியப் பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
#SriLankaNews