காங்கிரஸ் பொதுச்செயலர் பிரியங்கா காந்தி கைது

Priyanka

Priyanka

காங்கிரஸ் பொதுச்செயலர் பிரியங்கா காந்தி பொலிஸாரால் கைது செயப்பட்டுள்ளார்.

உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில் பொலிஸ் காவலிலிருந்து சாவடைந்த சுகாதார பணியாளரின் குடும்பத்தை காண்பதற்கு பிரியங்கா ஆக்ரா சென்றுள்ளார்.

இவ் வேலையில் கான்வாய் வாகனங்களை தடுத்து நிறுத்திய பொலிஸார் பிரியங்கா காந்தியை கைது செய்தனர்.

பிரியங்கா காந்தி ஆக்ரா செல்ல அனுமதி பெறவில்லை எனவும் அதனால் ஆக்ரா செல்ல அனுமதிக்கமுடியாது என பொலிஸார் கூறியுள்ளார்கள்.

மேலும் அங்கு 144 தடை உத்தரவு விதிக்கப்பட்டுள்ளதால் பிரியங்கா காந்தி அங்கு செல்ல அனுமதிக்க முடியாது எனவும் தெரிவித்துள்ளார்கள்.

ஆனால், தான் நாட்டில் எங்கும் சுதந்திரமாக நடமாடுவதற்கு முழு உரிமையும் சுகந்திரமுள்ளது என்ற அரசியலமைப்பு சட்டத்தை சுட்டிகாட்டிய பின்னர் அவர் உடனடியாக விடுதலை செய்யப்பட்டார்.

அதே போல் இம்மாதம் பிரியங்கா காந்தி உத்தரபிரதேசம் சென்றபோது பொலிஸார் தடுத்த நிறுத்தப்பட்டதாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

#india

Exit mobile version