அரசுக்குள் இருப்போராலேயே குழப்பம்! – ரொஷான் ரணசிங்க

roshan 1

“அரசுக்குள் இருக்கும் மூவரே அரசின் பயணத்தை திட்டமிட்ட அடிப்படையில் குழப்புகின்றனர். அவர்களை விரட்டியடிக்க வேண்டும்.” – என்று இராஜாங்க அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவர் பதவிக்கு நிமல் சிறிபாலடி சில்வாவே தெரிவாகியிருக்க வேண்டும். எனினும், அப்பம் சாப்பிட்டுவிட்டு, கட்சி தாவிச்சென்றவர் மீண்டும் வந்து, அந்த பதவியை பெற்றுக்கொண்டார். தற்போது விளம்பர அரசியலை அவர் முன்னெடுத்து வருகின்றார்.

அரசிலுள்ள மூவரே பயணத்தைக் குழப்புகின்றனர். அவர்களின் பெயர் விபரம் விரைவில் வெளியிடப்பட வேண்டும். அவ்வாறானவர்களை அரசிலிருந்து விரட்டியடிக்க வேண்டும்.” – என்றார்.

#SriLankaNews

Exit mobile version