யாழ்.மாநகரசபையின் 2022 ஆம் ஆண்டுக்கான பாதீடு நாளை (15) யாழ்.மாநகர முதல்வர் வி.மணிவண்ணனால் சமர்ப்பிக்கப்பட உள்ள நிலையில் கூட்டமைப்பின் முடிவை காணும் கூட்டம் இன்று நடைபெற்றது.
இக் கூட்டத்தில் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன், வட மாகாணசபை அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் மற்றும் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் 16 உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.
16 உறுப்பினர்களும் சரமாரியான குற்றச்சாட்டுக்களை முதல்வர் மணிவண்ணன் மீது ஆதாரத்துடன் சுமத்தினார்கள்.
இந்நிலையில், கட்சித்தலைமைகள் பாதீட்டை ஆதரிப்பதென முடிவு எடுக்கும் நிலையில் இருந்தாலும், உறுப்பினர்கள் அந்த கருத்துக்கு ஒத்துப்போகவில்லை.
அத்துடன், யாழ்.மாநகரசபையின் முதல்வர் வி.மணிவன்ணன் தமிழரசு கட்சித்தலைவர் உட்பட தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களிடம் பாதீட்டை ஆதரிக்குமாறு கோரியிருந்தார்.
இந்நிலையில், தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் உறுப்பினர்களிடம் பேரம் பேசும் நடவடிக்கைகளில் யாழ்ப்பாணத்தின் பிரபல கோடீஸ்வர வர்த்தகர் ஒருவர் களம் இறங்கியுள்ளதாகவும் கூட்டத்தில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.
பலராலும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் யாழ்.மாநகரசபையின் பாதீட்டில் மணிவண்ணன் அணியினருடன் ஈ.பி.டி.பி ஆதரவு அளிக்கும் எனவும் கூட்டமைப்பு உறுப்பினர்கள் நடுநிலைமை வகிக்க கூடும் எனவும் அரசியல் விமர்சகர்கள் தகவல் வெளியிட்டுள்ளனர்.
தொடர்பில் வாக்களிப்பு இடம்பெறும் கடைசி நிமிடம் வரை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டுமென தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் முக்கியஸ்தர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
#SrilankaNews