இலங்கையில் இன்று காலை முதல் விலை அதிகரிப்பு இடம்பெற்றுவரும் நிலையில், இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனமும் நடுநிசியில் விலை அதிகரிப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இதன்படி ஒரு லீற்றர் பெற்றோலின் விலை 77 ரூபாவாலும், ஒரு லீற்றர் டீசலின் விலை 55 ரூபாவாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், சுப்பர் டீசலின் விலை 95 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
எனவே, பஸ் கட்டணம் உட்பட போக்குவரத்து கட்டண அதிகரிப்பு தொடர்பில் நாளை அறிவிப்புகள் வெளியாகும்.
#SriLankaNews