புதிய ஜனாதிபதி செயலாளர் பதவிக்கு முக்கிய நபர்கள் இருவருக்கிடையில் கடும் போட்டி நிலவுவதாக அரசியல் வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
அதன்படி அலரி மாளிகையில் முக்கிய பதவியில் உள்ள காமினி செனரத்துக்கும் நிதியமைச்சர் பசில் ராஜபக்சாவின் நெருங்கிய சகாவுக்கும் இடையிலேயே குறித்த போட்டி நிலவுகின்றது.
எனினும் குறித்த பதவிக்கு பிரதமர் மகிந்தவால் பரிந்துரைக்கப்பட்ட காமினி செனரத்தே தெரிவு செய்யப்படுவதற்கான வாய்ப்புக்கள் அதிகம் காணப்படுகின்றன.
எதிர்வரும் ஜனவரி 30ம் திகதி பி.பி ஜயசுந்தர இராஜினாமா செய்யவுள்ள நிலையில் பெப்ரவரி மாதம் புதிய செயலாளர் பதவியேற்பார்.
ஜனாதிபதி செயலாளர் பதவியில் இருந்து விலகும் பிபீக்கு நிதி அமைச்சின் உயர் பதவியொன்று காத்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
Leave a comment