கொரோனா பரவல் காரணமாக நாட்டில் மூடப்பட்டிருந்த ஆட்பதிவு திணைக்களத்தின் அனைத்து அலுவலகங்களும் இன்று முதல் திறக்கப்பட்டு பொதுமக்களுக்கு சேவைகளை வழங்கவுள்ளன.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தால் வெளியிடப்பட்ட வழிகாட்டலுக்கு அமைவாக இந்த சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
ஆயினும் மறு அறிவத்தல் வரும் வரை ஒரு நாள் சேவை முன்னெடுக்கப்படாது எனவும் ஆட்பதிவு திணைக்களம் அறிவித்துள்ளது.
இதேவேளை தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவனத்தின் சேவைகள் சுகாதார வழிகாட்டலுக்கு அமைய ஆரம்பிக்கப்படவுள்ளன.
கையடக்கத் தொலைபேசி மூலம் 225 க்கு அழைப்பை மேற்கொண்டு நாள் மற்றும் நேரத்தை ஒதுக்கிக்கொள்ள முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.