20211019 113418 scaled
செய்திகள்இலங்கைபிராந்தியம்

படுகொலை செய்யப்பட்ட மயில்வாகனம் நிமலராஜனின், 21ஆவது ஆண்டு நினைவேந்தல்

Share

படுகொலை செய்யப்பட்ட மயில்வாகனம் நிமலராஜனின், 21ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.

தனது வீட்டில் ஊடகங்களுக்கு செய்தி எழுதிக் கொண்டிருந்த ஊடகவியலாளர் ம.நிமலராஜன், ஆயுததாரிகளால் துப்பாக்கியால் சுட்டும், குண்டு வீசியும் படுகொலை செய்யப்பட்டார்.

யாழ்.ஊடக அமையத்தில் இன்று நினைவேந்தல் நிகழ்வில் நிமலராஜனின் உருவப்படத்திற்கு யாழ். மாநகர சபை முதல்வர் வி.மணிவண்ணனும் வலி.கிழக்கு பிரதேச சபை தவிசாளர் நிரோசும் இணைந்து மலர் மாலை அணிவித்தார்.

அதனையடுத்து யாழ்ப்பாண மாநகர சபை உறுப்பினர் ஜெயசீலன் நினைவுச்சுடரை ஏற்றியதுடன் ஊடகவியலாளர்கள் பலரும் மலரஞ்சலி செலுத்தினர்.

ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜன் படுகொலை செய்யப்பட்டு இன்றுடன் 20 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன.

2000ஆம் ஆண்டு, ஒக்ரோபர் 19ஆம் திகதி இரவு 10 மணியளவில் யாழ்ப்பாணம் நகரின் உயர் பாதுகாப்பு வலயப் பகுதியாக அப்போது இருந்த, கச்சேரியடிப் பகுதியில் உள்ள வீட்டில் வைத்து அவர் படுகொலை செய்யப்பட்டார்.

அன்று மாலையில், நாகர்கோவிலில் விமானப்படை உலங்குவானூர்தி விடுதலைப் புலிகளால் சுட்டுவீழ்த்தப்பட்ட செய்தியை பிபிசி தமிழோசைக்கு தொலைபேசி மூலம் வழங்கியிருந்தார்.

பின்னர் நாளிதழுக்காக தொலைநகலில் அனுப்புவதற்காக அந்தச் செய்தியை எழுதிக் கொண்டிருந்த போதே, அவரது வீட்டுக்குள் நுழைந்த ஆயுததாரிகள் அவரைச் சுட்டுப்படுகொலை செய்தனர்.

அதையடுத்து, அவரது வீட்டுக்குள் கைக்குண்டை வீசிவிட்டுச் சென்றதில், நிமலராஜனின் தந்தை, தாய், மருமகன் உள்ளிட்டோர் படுகாயமடைந்தனர்.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Nine Arch Bridge Ella Sri Lanka 35 1
செய்திகள்இலங்கை

ஒன்பது வளைவுப் பாலம் விளக்குத் திட்டம் ஒத்திவைப்பு: தனியாரின் நிலப் பிரச்சினை காரணம்!

உள்ளூர் மற்றும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் முக்கிய இடமான தெமோதரை ஒன்பது வளைவுப் பாலத்தில்...

articles2FjYITDpH4jwEQ9VfnNT42
செய்திகள்அரசியல்இலங்கை

இலங்கை தமிழரசுக் கட்சியின் மன்னார் புதிய கிளை அலுவலகம் இன்று திறந்து வைப்பு!

இலங்கை தமிழரசுக் கட்சியின் (ITAK) மன்னார் கிளைக்கான புதிய அலுவலகம் இன்று (நவம்பர் 23) காலை,...

images 5 1
செய்திகள்உலகம்

லண்டனில் பலஸ்தீன ஆதரவுக் குழு தடையை எதிர்த்துப் போராட்டம்: 90 பேர் கைது!

பிரித்தானிய அரசாங்கம் பலஸ்தீனத்திற்கு ஆதரவான குழுவொன்றைத் தடை செய்ய நடவடிக்கை எடுத்து வருகின்ற நிலையில், அதற்கு...

Woman Harassment
உலகம்செய்திகள்

சக பெண் விமானி மீது பாலியல் பலாத்கார முயற்சி: பெங்களூருவில் சீனியர் விமானி மீது வழக்குப்பதிவு!

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தைச் சேர்ந்த 26 வயது விமானி ஒருவர், தான் வேலை செய்யும் விமான...