வைத்தியசாலைக்கு தாமதமாக வாருங்கள்! – பணிப்பாளர் சத்தியமூர்த்தி அறிவுறுத்து

sathiyamoorthy

யாழ்.போதனா வைத்தியசாலைக்கு சிகிச்சை பெறுவதற்கு வருவோர் தாமதமாக வைத்தியசாலைக்கு வருமாறு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி அறிவித்துள்ளார்.

நாட்டில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. யாழ்ப்பாணத்திலும் கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையிலையிலேயே வைத்தியசாலைக்கு சாதாரண சிகிச்சை பெறுவதற்கு வருவோரிடம் பணிப்பாளர் சத்தியமூர்த்தி மேற்படி கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

யாழ். குடாநாட்டில் தொடர்ச்சியாக பெய்துவரும் கனமழை மற்றும் தாதியர்கள், துணை மருத்துவ சேவை உத்தியோகத்தர்களின் பணிப்புறக்கணிப்பு போராட்டம் ஆகியவை காரணமாக யாழ். போதனா வைத்தியசாலையின் கிளினிக் பிரிவு மற்றும் சாதாரண பிரிவு பகுதிகளின் செயற்பாடுகள் மந்த கதியில் இடம்பெற்று வருகின்றன.

அத்துடன், கிளினிக் மற்றும் இருதய சிகிச்சை கிளினிக் ஆகிய பகுதிகளில் வெள்ளநீர் தேங்கி நிற்பதனால் சிகிச்சைகள் தற்போது இடம்பெறவில்லை.

எனவே இவற்றைக் கருத்தில் கொண்டு சாதாரண சிகிச்சை பெற வைத்தியசாலைக்கு வருவோர் மலை குறைவடைந்து பின்னர் வருகைதருவதன் மூலம், அசெளகரியங்களுக்கு முகம்கொடுக்காது சிகிச்சைகளை பெற்றுக்கொள்ள முடியும்.

எனினும், வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவு மற்றும் ஏனைய விசேட வைத்திய சேவைகள் அனைத்தும் வழமைபோல இடம்பெற்று வருகின்றன – என தெரிவித்துள்ளார்.

#SriLankaNews

Exit mobile version