முடிந்தால் விவாதத்துக்கு வாருங்கள்! – மைத்திரிக்கு ரவி கருணாநாயக்க சவால்

Ravi karunanayakka

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை பகிரங்க விவாதத்துக்கு வருமாறு முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க சவால் விடுத்துள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இந்த சவாலை விடுத்தார்.

மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பில் மைத்திரிபால சிறிசேன கருத்துகளை வெளியிட்டதுடன், ரவி கருணாநாயக்கவையும் மறைமுகமாக சாடியிருந்தார்.

இந்நிலையில் இதற்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் ரவியால் ஊடக சந்திப்பொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.  மைத்திரியால் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் அதிகார துஷ்பிரயோகம் உட்பட சில விடயங்கள் தொடர்பில் ஏழு ஆவணங்களை ரவி கருணாநாயக்க முன்வைத்தார்.

அவற்றில் தவறு இருக்கின்றதெனில் பகிரங்க விவாதத்துக்கு வருமாறும் அழைப்பு விடுத்தார்.

#SriLankaNews

Exit mobile version