கொழும்பு மாநகர மேயர் ரோசி சேனநாயக்கா உள்ளிட்ட 70 பேரடங்கிய குழுவினர் எதிர்வரும் 18ஆம் திகதி யாழ்ப்பாணத்துக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளனர்.
அனுபவங்களை பகிரும் வகையிலேயே மாநகரசபை உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் யாழ். செல்கின்றனர்.
அந்தவகையில் யாழ் மாநகர சபை மற்றும் வலி.தென் மேற்கு பிரதேச சபைகளுக்கு மேற்படி குழுவினர் செல்லவுள்ளனர்.
அத்துடன், மானிப்பாய் செல்லமுத்து மைதானத்தில் சிநேகபூர்வ கிரிக்கெட் போட்டியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
#SriLankaNews