கொழும்பு – கண்டி பிரதான வீதி இன்று (நவம்பர் 26) இரவு 10 மணி முதல் மீண்டும் மறு அறிவித்தல் வரும் வரை மூடப்படவுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் (Disaster Management Centre – DMC) தெரிவித்துள்ளது.
முன்னதாக, இந்த வீதி கனமழை மற்றும் மண்சரிவு காரணமாகக் கனேதென்ன (Ganetenna) பகுதியில் மூடப்பட்டிருந்தது.
பின்னர், போக்குவரத்து நெரிசலைக் கருத்தில் கொண்டு குறித்த வீதி ஒரு வழிப் பாதையாகத் தற்காலிகமாகத் திறக்கப்பட்டிருந்தது.
தற்போது நிலவும் வானிலை மற்றும் பாதுகாப்புக் காரணிகளைக் கருத்தில் கொண்டு, இன்று இரவு முதல் மீண்டும் அந்த வீதி முழுமையாக மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வாகன ஓட்டிகள் மாற்றுப் பாதைகளைப் பயன்படுத்துமாறும், மறு அறிவிப்பு வரும் வரை வீதியைப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் கோரியுள்ளது