கொழும்பு நகர எல்லைக்கு பூட்டு! – 3,000 க்கும் மேற்பட்டோர் பணியில்

police 2

பெப்ரவரி 4 ஆம் திகதி இடம்பெறவுள்ள 74 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு கொழும்பு நகர எல்லை மற்றும் மேல் மாகாணத்தை மூடுவதற்கு 3,000 க்கும் மேற்பட்ட பாதுகாப்புப் பணியாளர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதில் பொலிஸ், STF மற்றும் முப்படைகளின் அதிகாரிகள் உள்ளடங்குவதாகவும், மேலதிகமாக பொலிஸ் மற்றும் முப்படை புலனாய்வு அதிகாரிகளும் ஈடுபடுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேல்மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனின் நேரடிக் கண்காணிப்பின் கீழ் இந்த பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

#SriLankaNews

Exit mobile version