இருளில் மூழ்கியது சீனா!

ezgif.com gif maker 1 1

சீனாவில் நிலக்கரி இறக்குமதியில் ஏற்பட்டுள்ள சரிவு காரணமாக கடுமையான மின்வெட்டு ஏற்பட்டு வருகிறது.

இதன் காரணமாக சீனாவில் உள்ள சுமார் 20 மாகாணங்கள் இருளில் மூழ்கிக் காணப்படுகின்றன.

நிலக்கரி பற்றாக்குறை மற்றும் கார்பன் உமிழ்வை குறைக்கும் இலக்கை அடையும் நோக்கில் சீனா மின் பகிர்வை ரேசன் முறையில் விநியோகிப்பதற்கு தொடங்கியுள்ளது.

ஒரு நாளில் 8 முறை என்கிற வகையில் தொடர்ச்சியாக 4 நாட்கள் மின் துண்டிக்கப்படுகிறது எனத் தெரிவிக்கப்படுகிறது.

இதனால் அங்குள்ள லட்சக்கணக்கான மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் முடங்கியுள்ளது எனவும் அன்றாட பணிகளை மேற்கொள்வதில் கடும் இன்னல்களை எதிர்நோக்குகின்றனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இதன் காரணமாக வெளிநாட்டு ஏற்றுமதிகளும் பாதிக்கப்படுகின்றன எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனால் சீனாவின் மின்வெட்டு சர்வதேச பிரச்சினையாக மாறி வருகிறது என தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலை இன்னும் சில நாட்கள் நீடித்தால் சீன பொருளாதாரத்தில் நேரடி தாக்கம் ஏற்படும் உலக அளவிலான நிறுவனங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன.

Exit mobile version