கொவிட்தொற்றுக்குப் பின் நாடு திறந்துவிடப்பட்ட நிலையில் சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றாமல் மக்கள் பல இடங்களுக்கு உல்லாசமாகப் பயணிக்கின்றனர் என பொது சுகாதார சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்தார்.
தொடர்ந்து அவர், மக்கள் இவ்வாறு தொடர்ந்து செயற்பட்டால் நாடு முடக்கப்படும் நிலைக்கு வாய்ப்புள்ளது.
போயா தினங்கள் உட்பட நீண்ட வார இறுதி நாட்களில் மக்களின் நடத்தை வருந்தத்தக்கது எனவும் இலங்கை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
நாட்டில் கொரோனா மிகவும் விரைவாகப் பரவுவதற்கான வாய்ப்பிருப்பதால் மக்கள் சுகாதாரவழிமுறைகளை பேணவேண்டும். மக்களின் செயற்பாட்டை பொருத்தே முடிவுகள் எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
#SriLankaNews