15
செய்திகள்உலகம்

பருவநிலை மாற்றமும், அதிகரிக்கும் வெப்பநிலையும்

Share

1980 ஆம் ஆண்டளவில் நாளொன்றில் பதிவான உச்ச வெப்பநிலையை விட, உலகில் தற்போது இருமடங்கு வெப்பநிலை நிலவி வருகிறது என ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

இந்த வெப்பநிலை அதிகரிப்பானது இதுவரை உணரப்படாத இடங்களை விட மேலதிக இடங்களில் உண்டாகிறது எனவும் அந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

1980 மற்றும் 2009க்கு இடைப்பட்ட காலப்பகுதியில், வெப்பநிலை 50 டிகிரியை கடந்திருந்தது. எனினும் 2010 தொடக்கம் 2019க்கு இடைப்பட்ட காலப்பகுதியில் 26 நாள்களாக நீடித்திருந்தது. தற்போது வெப்பநிலை 40 நாள்கள் வரை அதிகரித்துள்ளது என அந்த ஆய்வு தெரிவித்துள்ளது.

புதைபடிம எரிபொருள்கள் எரியூட்டப்படுவதே இதற்கு 100 சதவீத காரணம் என பருவநிலை மாற்றம் தொடர்பான நிகழ்வுகளை ஆய்வு செய்யும் மூத்த அறிவியலாளர் வைத்தியர் பெட்ரிக் ஓட்டோ தெரிவித்துள்ளார்.

உலகில் மத்திய கிழக்கு மற்றும் வளைகுடா பிராந்தியங்களில் 50 டிகிரி செல்சியஸ்க்கும் அதிகமான வெப்பநிலை காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

காலநிலை மாற்றத்தின் காரணமாக சமுத்திர நீர்மட்டம் 2 மீற்றரால் உயர்வடைந்து சிறிய தீவுகள் மூழ்கக்கூடிய அபாயம் காணப்படுகிறது எனவும்  ஐக்கிய நாடுகளின் காலநிலை மாற்றம் தொடர்பான குழுவின் அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
28 1
உலகம்செய்திகள்

ஈரான் நிபந்தனையின்றி சரணடைய வேண்டும்: அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் திட்டவட்டம்!

மத்திய கிழக்கில் ஈரான் உடனான மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், அந்த நாட்டுடன் எவ்வித ஒப்பந்தங்களும் செய்துகொள்ளப்பட...

27 1
செய்திகள்உலகம்

தெஹ்ரானில் உள்ள ஈரானின் இரகசிய நிலத்தடி பதுங்கு குழி அழிப்பு: இஸ்ரேலிய இராணுவம் தாக்குதல்!

ஈரானின் தலைநகர் தெஹ்ரானின் மையப்பகுதியில், ஈரானின் முன்னாள் உயர்மட்டத் தலைவரான அலி கமேனிக்காக உருவாக்கப்பட்டிருந்த பிரம்மாண்டமான...

26 2
செய்திகள்உலகம்

இந்தியப் பெருங்கடலில் ஈரானியக் கப்பல்கள்: இந்தியாவிலும் இலங்கையிலும் தஞ்சம், அமெரிக்காவுடனான மோதலில் திருப்பம்!

இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் ஈரானியக் கடற்படைக்குச் சொந்தமான மூன்று போர்க்கப்பல்கள் ஒரே காலப்பகுதியில் சிக்கலுக்கு உள்ளாகியுள்ள...

25 2
செய்திகள்உலகம்

ஜெப்ரி எப்ஸ்டீன் கோப்புகள்: டொனால்ட் ட்ரம்ப் தொடர்பான விடுபட்ட FBI ஆவணங்களை வெளியிட்டது அமெரிக்க நீதித்துறை!

ஜெப்ரி எப்ஸ்டீன் தொடர்பான ஆவணங்களின் ஆரம்பகட்ட வெளியீட்டில் விடுபட்டிருந்த, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீதான...